காமிரா கண்கள்
‘‘எந்தக் கலையும் முடிவற்ற கற்றலைக்கொ ண் ட து . பொழுது போக்காக இக்கலையைப் பார்க்கிறேன் என்றாலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகிறேன்.'' என்கிற ராமலக்ஷ்மி இயற்கை, விலங்கு, பறவை என எல்லா வகைப்படங்களையும் எடுத்து வருகிறார். இருப்பினும் தளராத நம்பிக்கையோடு வாழ்வில் நகருகிற சாமான்ய மனிதர்களைப் படம் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சுயமாக புகைப்படம் எடுக் கக் கற்ற இவர், இப்போது பெங்களூருவில் வசிக்கிறார். http://photography-in-tamil. blogspot.in/ என்கிற தமிழில் புகைப்படக் கலை பற்றிய இணையதளத்தையும் நிர்வகிக்கிறார். இவர் எழுதிய சிறுகதை, கவிதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன.
நவம்பர், 2015.